பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலை முன்னிட்டு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி தி.மு.க. வேட்பாளர் கௌதம் சிகாமணியை ஆதரிப்பதாக பிரசாரம் செய்திருந்தார்
அதுமட்டும் அல்லாமல் இந்த பிரசாரத்தின் போது பொதுமக்களில் போக்குவரத்து சுமார் 03 மணி நேரம் தடைப்பட்டதாகவும் தெரிவிக்க படுகின்றது.
இதையடுத்து தேர்தல் பறக்குப்படை அலுவலர் முகிலன் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் 143,341,188 ஆகிய பிரிவுகளின் கீழ் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது