IPL போட்டிகள், பெரும் எதிர்பார்ப்புக்களோடு நடைபெற்று வரும் நிலையில், போட்டிகளை காண வரும் ரசிகர்கள் தங்களது செல்லப் பிராணிகளுடன் போட்டிகளை ரசிக்க முடியும் என்று கூறப்படுகின்றது.
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் IPL திருவிழா களைக்கட்ட தொடங்கி விட்டது. ரசிகர்கள் பெரும் ஆரவாரத்துடன் IPL போட்டிகளை கண்டுக்களித்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் நடைபெறும் போட்டிகளை காணவரும் ரசிகர்கள் கூட்டம், இன்னும் இன்னும் அலை மோதுகின்றது. ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த அணியின் நிறத்தில் உடைகளை அணிந்து பெரும் ஆரவாரமாக, ஆதரவு தெரிவித்து வருகின்றார்கள்.
உண்மையில் IPL போட்டிகளை காண ஏராளமான ரசிகர்கள் தீவிர ஈடுபாட்டுடன் இருப்பதுடன், இன்னும் ஒரு பகுதியினர் தங்கள் செல்லப் பிராணிகளுடன் போட்டிகளை காண செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றார்கள். இப்படி IPL போட்டிகள் மீது பைத்தியமாக சுற்றும் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்திருக்கின்றது. உங்கள் செல்லப் பிராணிகளுடன் IPL போட்டிகளை காண செல்லலாம் என்பதுதான்தான் அது. ஆகவே, இனிமேல் தமது செல்லப் பிராணிகளை வீட்டில் தனியே விட்டு வந்துவிட்டோம் என்ற கவலை இன்றி, உங்களுடனே நீங்கள் உங்கள் செல்லப் பிராணிகளை கோலாகல IPL போட்டிகளை காண அழைத்துச் செல்லலாம்.
ஆனால், இதற்கு நிபந்தனை ஒன்றும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு வசதி பெங்களூர் அணி மோதும் பந்தையங்களின்போது மட்டுமே இருப்பதாக கூறப்படுகின்றது. ராஜஸ்தான் அணியின் போட்டியின் போது ஸ்டேடியத்திற்கு வரும் ரசிகர்களுக்கு இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரசிகரளுக்காக ராஜஸ்தான் அணி சார்பில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆகவே, உங்கள் செல்ல பிராணிகள் பூனை, நாயாக இருந்தால் பிரச்சினை இல்லை. அதுவே பாம்பு, முதலை மாடு ஆடு என்றால் நடக்கிற காரியமா?