அஞ்சலி என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது.கற்றது தமிழ், எங்கேயும் எப்போதும், கலகலப்பு மற்றும் அங்காடித்தெரு போன்ற பல தமிழ் திரைப்படங்கள் நடித்திருக்கின்றார் அஞ்சலி.
பல நடிகர்களுடன் நடித்த போதும் நடிகர் ஜெய்யை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கிசு கிசு வதந்திகள் வந்ததுதான் அதிகம்.இந்த தகவலை அவர் மறுக்கவும் இல்லை, ஆமாம் என்று உறுதிப்படுத்தவும் இல்லை.
தற்போது இதற்காக ஒரு பதிலடியை கொடுத்துள்ளார் அஞ்சலி.நான் யாரையும் காதலிக்கவில்லை,நான் இருக்கும் பிசியில் காதலிப்பதாகவும் இல்லை.
நடிகைகளை பொறுத்த வரையில் ,சேர்ந்து நடிக்கும் நடிகர்களுடன் இணைத்து வதந்தி வருவது சகஜமானதொன்று.அதேபோல் நடிகர்கள் நடிகைகள் பிடித்து மனம் ஒத்துழைத்து காதலித்து திருமணம் செய்வதும் வழமையானதொன்று.
என்னை பொறுத்த வரையில் மனதளவில் நான் காதலிப்பது என் சினிமாத்துறையை மட்டுமே.வேறு காதல் எனக்கில்லை என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார் அஞ்சலி.
என்னை பொறுத்த வரை நான் திருமணம் செய்த பின்பும் எனது நடிப்பை நான் தொடருவேன்.என் சினிமா பயணத்திற்கு எப்போதுமே திருமணம் ஒரு தடையாக இருக்காது என்று அழகாக கூறியுள்ளார் நடிகை அஞ்சலி.