கோலிவுட்டிற்கு கடந்த வாரம் த்ரிஷா, இந்த வாரம் நயன்தாரா தான் போல. இவருக்கு சமீபத்தில் ஒரு ஜாக்பாட் வாய்ப்பு வந்துள்ளது. ஆனால், அதை வேண்டாம் என்று சொல்லி அனுப்பி விட்டாராம்.
அது வேறு ஒன்றும் இல்லை விக்ரம் படத்தில் ஹீரோயின் வாய்ப்பு தான், சில வருடங்களுக்கு முன் இவர் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க, அந்த சமயத்தில் நயன்தாராவிடம் நீங்கள் அந்த படத்திலிருந்து விலகினால், விக்ரமிற்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என கூறினார்களாம் சிலர்.
ஆனால், அவரோ அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு தேவையில்லை என்று அன்றிலிருந்து இன்று வரை விக்ரமுடன் நடிக்க பல வாய்ப்புக்கள் வந்தும் நடிக்காமல் இருக்கின்றாராம் நயன்தாரா.
கோடம்பாக்கக் குருவி