இந்த நிலையில், 78 வயதான பீலே அவ்வப்போது உடல்நலக் கோளாறுகளை சந்தித்து வருகின்ற நிலையில், சிறுநீர் தொற்றுக் காரணமாக பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உடல்நலம் முன்னேற்றம் அடைந்து வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், இன்னும் ஓரிரு நாட்களில், பீலே வீட்டிற்கு திரும்பலாம் என்று, எதிர்பார்க்கப்படுகின்றது. இதனிடையே, பிரேசில் அணியின் அதிக திறமை வாய்ந்த வீரராக அறியப்பட்ட பீலே, 1958, 1962, மற்றும் 1972-ஆம் ஆண்டுகளில் தனது அணிக்கு உலகக்கோப்பையைப் பெற்றுக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.