கண்ணசைவைக் காட்டி, பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் தனித்துவமான இடத்தைப் பிடித்த இளம் நடிகை ப்ரியா வாரியார். எனினும் இவர் நடித்த ''ஒரு அடார் லவ்'’ படம் பெரிதாக பேசப்படவில்லை.
இந்த படத்தால், திரைப்பட தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டது. கண் சிமிட்டல் பிரபலமானதால் பிரியா வாரியருக்கு முக்கியத்துவம் அளிக்கும்படி தயாரிப்பாளர் வற்புறுத்தி கதையை மாற்ற வைத்தார் என்று, படத்தின் இயக்குனர் குற்றம் சுமத்தினார்.
இதற்கு தனது சமூக வலைத்தளத்தில் நடிகை பிரியா வாரியர் பதில் வழங்கியுள்ளார். “நான் உண்மையை பேச ஆரம்பித்தால், சிலர் பல பிரச்சனைகளில் சிக்குவார்கள். அவர்களை போல் நானும் இருக்க கூடாது என்று அமைதியாக இருக்கின்றேன். அவர்களை கர்மா கவனித்துக் கொள்ளும். அத்துடன் இப்போதைக்கு சினிமாவில் இருந்து விலகும் தீர்மானம் இல்லை'' என, நடிகை ப்ரியா வாரியார் குறிப்பிட்டுள்ளார்.