பெண் ஒருவரின் கண்ணில் உயிருடன் இருந்த 4 தேனீக்களை மிகவும் நுட்பமாகவும் குறித்த பெண்ணிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையிலும் வைத்தியர்கள் அகற்றியுள்ளார்கள்.
இந்த அரிய செயலை Taiwan வைத்தியர்கள் மேற்கொண்டுள்ளார்கள். Taiwan நாட்டை சேர்ந்த 29 ஹீ என்ற பெண் கடந்த வாரம், தனது உறவினரின் கல்லறையை சுத்தம் செய்வதற்காக சென்று சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த சுத்தம் செய்யும் பணிகளை முடித்து வீட்டிற்கு செல்லும்போது அவருக்கு கண்களில் அரிப்பு மற்றும் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கைகளை கொண்டு வழக்கமாக அநேகரும் செய்வது போன்று கண்களை கசக்கியுள்ளார். ஆனால் வலியோ அவருக்கு அதிகரித்துள்ளது. இதனால் கண்களை நன்றாக நீரில் கழுவியுள்ளார். அப்போதுகூட அவருக்கு வலி குறைந்தபாடில்லை. இதனால் மறுநாள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்ற நிலையில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
இந்த நிலையில் குறித்த பெண்ணிற்கு கண்ணில் ஏற்பட்ட வலி மற்றும் அரிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த வைத்தியர், கண்களில் ஏதோ பூச்சியின் கால்கள் இருப்பது போன்று தோன்றியது. மைக்ரோஸ்கோப் மூலம் எடுத்துவிடலாம் என பார்த்தேன். அப்போது 4 தேனீக்கள் உள்ளே இருப்பதைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தேன். பின்னர் மெதுவாக அவரது கருவிழிகளுக்கு எவ்வித பாதிப்புமின்றி தேனீக்களை எடுத்தேன். அவை உயிருடன் இருந்தன. உலகிலேயே இதுதான் முதன் முறை நிகழ்ந்த சம்பவம்.
இவை வியர்வை தேனீக்கள் ஆகும் என்றும் அவர் கூறினார். இதன் காரணமாக 5 நாட்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது 80% பார்வை சரிசெய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பார்வையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என குறித்த மருத்துவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.