இந்தியாவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சி வெற்றி பெற்றால், சமாதான பேச்சுவார்த்தைக்கு செல்ல வாய்ப்புண்டு என்று, இந்திய பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளிநாட்டு ஊடகவியலாளர்களை சந்த்தித்து கருத்து தெரிவிக்கும்போது இவ்வாறு கூறினார். குறித்த சந்திப்பில், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள பயப்படலாம்.
பா.ஜ.க. ஒரு வலதுசாரிக் கட்சி - வெற்றி பெற்றால், காஷ்மீரில் சில வகையான தீர்வு கிடைக்கும். மேலும், இந்தியாவில் இப்போது என்ன நடக்கிறது என்று நான் பார்க்க நினைத்தேன், முஸ்லிம்கள் தாக்கப்படுகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு மகிழ்ச்சியாக இருந்த இந்திய முஸ்லிம்களை தாம் அறிந்திருந்ததாகவும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். தீவிர இந்து தேசியவாதத்தால் இப்போது கவலைப்படுவதாகவும் இம்ரான் கான் இதன்போது தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு நில உரிமைகளை உறுதி செய்யும் அரசியலமைப்பின் 35-வது பிரிவை அகற்றுவதற்கான பா.ஜ.க. வாக்குறுதி, ஒரு முக்கிய கவலையாக இருந்தது என்றும், அவர் கூறினார்.