தாய்லாந்து அரசாங்கம் செல்ஃபி பிரியர்களுக்கு கடுமையான தண்டனை அறிவிப்பை விடுத்துள்ளது. ஆபத்தான இடங்களில் செல்ஃபி எடுப்பதால் பலரும் பலியாகிய சம்பவங்களை நாம் அறிந்துவரும் நிலையில், தாய்லாந்து அரசாங்கம் அந்நாட்டின் விமான நிலையம் அருகே செல்ஃபி எடுத்தால் அதிகபட்சம் மரணதண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
தாய்லாந்தின் மாய் காவோ என்ற கடற்கரை, சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் பகுதியாக காணப்படுகின்றது. குறித்த கடற்கரையின் அருகே விமானநிலையம் ஒன்று உள்ள நிலையில், அந்த விமானம் ஏறுவதும், இறங்குவதும் தரையிலிருந்து சில அடி உயரத்தில் நடப்பது வழக்கம்.
இதன்காரணமாக அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் விமானம் பறக்கத் தொடங்கும்போது செல்ஃபி எடுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். மிகவும் ஆபத்தான இடம் என்பதையும் பொருட்படுத்தாது செல்ஃபி எடுக்கும் பலரும் விமானத்தின் என்ஜினில் இருந்து வெளியாகும் அதிவேக காற்றில் சிக்கி, தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதன் காரணமாக மாய் காவோ விமானநிலையம் முன் செல்ஃபி எடுக்க தாய்லாந்து அரசாங்கம் தடை விதித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த அறிவிப்பை ஒரு சாரார் ஆதரிக்க மற்றுமொரு பகுதியினர் எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.