ஆண்ட்ரியாவின் திரைப்படங்கள் என்றால், பல இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கு அதிகமாகவே பிடிக்கும். யதார்த்தமான நடிப்பையும், கவர்ச்சியான பாத்திரங்களையும் ஏற்று நடித்து ரசிகர்களின் மனதில் மிகப்பெரும் இடத்தைப் பிடித்தவர் நடிகை ஆண்ட்ரியா. அவ்வப்போது இவர் பாடல்களையும் பாடி பல பாராட்டுக்களை பெறுவார்.
தற்போது மாளிகை என்ற படத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்து வருகின்றார். இந்த திரைப்படம் முற்றுமுழுதாக திகில் படமாக உருவாகுவதாகவும், இந்த படத்தில் ஆண்ட்ரியா இரு வேடங்களை ஏற்று நடித்துள்ளதாகவும், செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்த திரைப்படம் குறித்து ஆண்ட்ரியா கருத்து வெளியிட்டுள்ளார். தற்போது வெளிவரும் படங்கள் கதாநாயகர்களை மையமாக வைத்தே அதிகமாக உருவாக்கப்படுகின்றன. எனினும் பல திறமையான கதாநாயகிகளுக்கு சரியான அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை. இந்த நிலை மாற வேண்டும். கதாநாயகர்களும், நாயகிகளுக்கான அங்கீகாரத்தை பெரிதாக வரவேற்பதில்லை. இது மனதளவில் அதிர்ப்தியளிக்கின்றது'' என, நடிகை ஆண்ட்ரியா குறிப்பிட்டுள்ளார்.