கவர்ச்சிகரமான நடிப்பால், இளைஞர்கள் மற்றும் யுவதிகளை கவர்ந்த நடிகர் கணேஷ். "அபியும் நானும்"படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 'உன்னைப் போல் ஒருவன்', தொடரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தொலைக்காட்சி தொகுப்பாளினி மற்றும் சின்னத்திரை நடிகையான நிஷாவை திருமணம் செய்து கொண்ட கணேஷ், தற்போது தனது மனைவி நிஷா கர்ப்பம் தரித்துள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார்.
“எங்கள் குடும்பத்திற்கு வர இருக்கும் புதுவரவை வரவேற்க காத்திருக்கிறோம். என் வாழ்வின் அப்பா என்ற அங்கீகாரத்தை பெரும் தருணத்திற்காக மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன். என்னை நானே வளர்த்துக் கொள்ள வேண்டிய நேரம் இது” என, கணேஷ் நெகிழ்ச்சியுடன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.