மூன்று ஆண்டுகளுக்கு முன்னால், மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையத்தின் பட்டதாரி மாணவியாக கேட்டி பௌமேன் கருந்துளையின் முதலாவது புகைப்படத்தை உருவாக்குவதற்கான புதிய அல்கோரிதத்தை உருவாக்குவதற்கு தலைமைதாங்கினார். இன்று, இந்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது" என்று மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையமும் அதன் செயற்கை நுண்ணறிவு ஆய்வகமும் தெரிவித்துள்ளது.
Dr. பௌமேன் உருவாக்கிய அல்கோரிதத்தால், ஒன்றோடொன்று தொடர்பு ஏற்படுத்தப்பட்ட 'இவண்ட் ஹோரிசன் தொலைநோக்கி'யால் HD தரத்தில் கருந்துளை புகைப்படமாகியுள்ளது.
இந்த புகழ்மிக்க புகைப்படம் வெளியான சில மணிநேரங்களில், ட்விட்டரில் பெயர் ட்ரண்ட் ஆக Dr.பௌமேன் சர்வதேச அளவில் பேசப்படும் நபரானார்.
மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையம் மற்றும் ஸ்மித்கோசியன் வானியற்பியல் மையத்தாலும் டாக்டர் பௌமேன் பாராட்டப்படுகிறார்.இன்று, பல முயற்சிகளுக்கு அப்பால் இந்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது" என்று மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையமும் அதன் செயற்கை நுண்ணறிவு ஆய்வகமும் தெரிவித்துள்ளது,
ஒரு தொலைநோக்கி தனியாக கருந்துளையை படம் பிடித்துவிட முடியாது. எனவே 'தலையீட்டுமானி' என்றழைக்கப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எட்டு தொலைநோக்கிகளின் வலையமைப்பு உருவாக்கப்பட்டது.
அவை வழங்கிய தரவுகள் நூற்றுக்காணக்கான HARD DISC களில் சேமிக்கப்பட்டு, பொஸ்டன், அமெரிக்கா மற்றும் ஜெர்மனியின் போன் ஆகிய இடங்களில் இருக்கும் மத்திய செயல்முறை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்த தரவுகளை செயல்முறை செய்ய Dr.பௌமேன் உருவாக்கிய அல்காரித முறை உதவியதால் கருந்துளையின் இந்த புகைப்படம் நமக்கு கிடைத்துள்ளது. இந்த தரவுகளில் இருந்து புகைப்படத்தை பெறுவதற்காக, வேறுபட்ட அனுமானங்களோடு உருவாக்கப்பட்டிருந்த பல்வேறு அல்கோரிதம்களோடு செய்யப்பட்ட பரிசோதனை முயற்சிக்கு பௌமேன் தலைமை தாங்கினார்.
இந்த அல்கோரிதம்களால் கிடைத்த முடிவுகள் நான்கு தனிப்பட்ட குழுக்கள் பகுப்பாய்வு செய்து அவர்களின் கண்டுப்பிடிப்பை உண்மை தன்மை ஆய்வு செய்து நம்பிக்கையை உருவாக்கினர்.வானியலாளர்கள், இயற்பியலாளர்கள், கணிதமேதைகள், பொறியியலாளர்களை உருக்கிய பானைகள்தான் நாங்கள். அதனால்தான் முடியாதது என்று முன்னர் நம்பப்பட்டதை சாதிக்க முடிந்தது என்று Dr . பௌமேன் தெரிவித்துள்ளார்.