லேடி சூப்பர் ஸ்டார், டாடா குழுமத்தில் இணைந்தார்.
SooriyanFM Gossip - லேடி சூப்பர் ஸ்டார், டாடா குழுமத்தில் இணைந்தார்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
தமிழ்த்திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயந்தாரா, டாடா குழுமத்தை சேர்ந்த ‘தனிஷ்க்’ நகையகத்தின் விளம்பரத் தூதராக நியமனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை டாடா குழுமத்தின் சந்தைப்படுத்தல் உதவி துணைத்தலைவர் தீபிகா திவாரி உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன் நயன்தாராவின் வருகை எங்களின் பயணத்தை மேலும் சிறப்பாக்குவதுடன், எங்கள் வளர்ச்சிக்கு மிகவும் பொருத்தமான, நேர்த்தியான வசீகரத்தையும், ஆரவார வரவேற்பையும் பெற உதவும் என நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் தனிஷ்க் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டமை குறித்து நயன்தாரா கருத்து வெளியிட்டுள்ளார். “தனிஷ்க் மக்கள் மனதில் இடம்பிடித்த நகையகம் ஆகும். அதன் ஒரு அங்கமாக இருப்பதில், நான் பெருமை அடைகிறேன். இங்குள்ள அழகான வடிவமைப்பைக் கொண்ட நகைகள் என்னை அதிகமாக கவர்ந்துள்ளன. ‘தனிஷ்க்’ குழுவுடனான இந்த உறவு என்னை அதிகமாக மகிழ்ச்சியடைய வைத்துள்ளது'' என நடிகை நயன்தாரா குறிப்பிட்டுள்ளார்.