உலகிலேயே மிக மெல்லிய ஓடு கொண்ட பெண் ஆமை வயது முதிர்ச்சி காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘யாங்ட்ஷி’ என்று செல்லமாக அழைக்கப்படும் இவ்வகை ஆமைகள், உலகிலேயே மிகவும் மெல்லிய ஓடு கொண்ட ஆமைகளாக அறியப்படுகின்றன. தற்போது இவ்வகை ஆமைகள் அழிந்து வருகின்றன.
இந்த நிலையில், சீனாவின் ஷூஷோ உயிரியல் பூங்காவில் இருந்த 90 வயதான இந்த அரியவகை பெண் ஆமை இனத்தின் கடைசி ஆமை, வயது முதிர்ச்சி காரணமாக உயிரிழந்தது.
யாங்ட்ஷி இனத்தின் கடைசி பெண் ஆமையும் இறந்து விட்டதால், இனப்பெருக்கம் அடைய முடியாத நிலையில், இவ்வகை ஆமை இனம் அழிவின் விளிம்பை சந்தித்துள்ளதாக கூறப்படுகின்றது.