மசூதிகளில் முஸ்லீம் பெண்கள் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவொன்றை, விசாரணைக்கு எடுத்துக் கொண்ட இந்திய உச்ச நீதிமன்றம், இந்த விடயம் தொடர்பில் மத்திய அரசாங்கம் பதிலளிக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளது.
குறித்த மனுவை புனேவை சேர்ந்த தம்பதியினர் தாக்கல் செய்திருந்தார்கள். எது எவ்வாறாக இருப்பினும், சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த ஒரே காரணத்துக்காக மட்டுமே, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.