அதிகரித்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் வெளிவரவுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்திற்கான வில்லன் பாத்திரத்திற்கான தெரிவுகள், தற்போது மும்முரமாக இடம்பெற்று வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்த படத்திற்கான வில்லனாக இந்தி நடிகர் பிரதிக் பாபரை ஒப்பந்தம் செய்துள்ளதாக, தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘பாகி’ 2 படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானார். அந்த படத்தை அடுத்து இவருக்கான வரவேற்பும் அதிகமாக இருந்தது.
இந்த நிலையில், தர்பார் திரைப்படத்தில் பிரதிக் பாபர் வில்லனாக நடிக்கவுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் உத்தியோகபூர்வமான தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை.