பெருநாட்டின் முன்னாள் அதிபரை கைது செய்யச் சென்றபோது, தற்கொலை செய்து கொண்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரு நாட்டின் முன்னாள் அதிபர் "ஆலன் கார்சியா" (Alan García). இவர் ஊழல் வழக்கை எதிரிகொண்டு வந்தநிலையில், கைது செய்ய சென்றபோது, அவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். 69 வயதான இவர்மீது, பதவியில் இருந்த போது, ஊழல் செய்ததாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதன்காரணமாக அவர் மீது விசாரணை நடைபெற்று வந்தது.
ஊழல் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரை கைது செய்ய காவல்துறையினர் லிமாவில் உள்ள ஆலன் கார்சியா வீட்டுக்கு நேற்று காலை 6.30 மணியளவில் சென்றிருந்தனர். அதை அறிந்த அவர் தனது வீட்டில் இருந்த துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை வைத்தியசாலையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தும், அவர் சிசிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவர் இறந்தமையை அவரது கட்சியான "அப்ரா" உறுதி செய்துள்ளது. இதற்கு முன்னர் ஆலன் கார்சியா ஏற்கனவே 3 தடவை மாரடைப்பால் பாதிக்கப்பட்டு, அவருக்கு இருதய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.