பிலிப்பைன்சைச் சேர்ந்த லுாசோன் தீவில் ஆய்வு மேட்கொண்டபோது சில எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றை ஆராய்ந்தபோது, அவை புதிய மனித இனத்தின் எலும்பு கூடுகள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
'ஹோமோ லுசோனெசிஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மனித இனம், அந்தத் தீவில், 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர்.
லுாசோன் தீவு, மனித எலும்புக்கூடுகள், மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில் இதுவரை கண்டுபிடிக்கப்படாதவை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மொத்தம் 12 எலும்புகளும், சில பற்களும் விஞ்ஞானிகளுக்குக் கிடைத்துள்ளன. இதை வைத்து இந்த இன மனிதர்கள் சற்று குள்ளமாக இருக்கக்கூடும் என்றும், 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன், ஆப்ரிக்காவில் வாழ்ந்த, 'ஆஸ்ட்ரலோபிதிகஸ்' வகை மனிதர்களின் உடற்கூறுகளுடன் சற்று ஒத்துப்போவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.