பேஸ்புக் நிறுவனரான மார்க் ஜூக்கர்பெர்க், தனது மனைவி நிம்மதியாக தூங்க வேண்டும் என்பதற்காக பிரத்யேக ஒளிரும் மரப்பெட்டி ஒன்றை உருவாக்கியுள்ளார்.
அவரது மனைவி பிரிசில்லா, இரவில் தூக்கத்தின் இடையில் திடீரென எழுந்து நேரத்தை பார்ப்பதும், அதனால் தூக்கம் அவரின் தூக்கம் கெடுவதால் தனது காதல் மனைவியை நிம்மதியாக தூங்க வைக்க பிரத்யேக ஒளிரும் மரப்பெட்டியை அவர் வடிவமைத்துள்ளதாகவும் மார்க் கூறியுள்ளாராம்.
இந்த ஒளிரும் மரப்பெட்டி காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் மிக மங்கலான ஒளியை வீசும். இந்த நேரத்தில் அவர்களின் 2 பெண் குழந்தைகளும் தூக்கத்தில் இருந்து எழும்பும் நேரம் என்பதால் அலார ஓசைக்காக காத்திருக்காமல் அந்த மங்கலான ஒளிக்கு பின் பிரிசில்லா பதற்றமின்றி நிம்மதியாக எழ முடியும் என மார்க் கூறியுள்ளார்.
அலாரம் அடித்தால் குழந்தைகளுக்கு இடையூறாக இருக்கும். ஆனால் இந்த ஒளிரும் மரப்பெட்டியால் யாருக்கும் எந்த தீங்கும் இருக்காது என்றும் இது சிறப்பாக செயல்படுகிறது. இந்த ஒளிரும் மரப்பெட்டி தான் நினைத்ததை விட சிறப்பாக செயல்படுவதாகவும், தன் நண்பர்கள் வட்டாரத்தில் அது பிரபலமாகி வருவதாகவும் கூறிய மார்க் ஜூக்கர்பெர்க், அதை தற்போது பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அதனை தயாரிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.