தங்க கழிப்பறை பற்றி கேள்விப்பட்டுள்ளோம், அது அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது. 18 கேரட் தங்கத்தில் வடிவமைக்கப்பட்டது. இத்தாலியைச் சேர்ந்த, மவுரிசியோ கேட்டலான் என்பவர் இதனை வடிவமைத்தார்.
பிரிட்டனின், ஆக்ஸ்போர்டுஷைர் நகரில் உள்ள பிளேன்ஹெய்ம் அரண்மனை குளியல் அறையில் இந்த கழிப்பறை இப்போது பொருத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, இந்த கழிப்பறை விரைவில் திறக்கப்படவுள்ளது.