இளைஞர்களின் மனதில் இப்போது அதிகமாக இடம்பிடித்த நகைச்சுவை நடிகர்களில் யோகி பாபுவும் ஒருவர். யோகி பாபுவின் அண்மைய திரைப்படங்கள், மக்கள் மனதில் அதிகமான வரவேற்பை பெற்று வருகின்றன.
தற்போது யோகி பாபு, முத்துக்குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள தர்மபிரபு என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.
இப்படத்தில் யோகி பாபு எமதர்மராக நடிக்கின்றார். இந்த நிலையில் குறித்த படம் தொடர்பில் நடிகர் யோகி பாபு கருத்து வெளியிட்டுள்ளார்.
'' எமதர்மர் வேடத்தை ஏற்று நடிக்கும் போது, இதுவரையிலும் இல்லாத அளவுக்கு ஒரு திமிர் வந்துள்ளது. அந்த பாத்திரத்தை ஏற்று உள்வாங்கி நடிக்கும் போது, ஆரம்பத்தில் மனதில் கொஞ்சம் பயம் இருந்தது. பின்னர் திமிர் தான் வந்தது. ஆனால் அந்த திமிர் வெறுமனே படத்தில் மட்டும் தான் இருக்கும். '' என நடிகர் யோகி பாபு குறிப்பிட்டுள்ளார்.