சினிமாவில் நடிகர்களுக்கு எப்போதும் வெற்றிப் படம் அமையாது. ஆனால் ஒரு சில படங்கள் ரசிகர்களிடம் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் அதிக பாராட்டையும், வரவேற்பையும் பெறும்.
அப்படி விஜய்யின் சினிமா பயணத்தில் மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது கில்லி. தரணி இயக்கிய இப்படத்தில் நாயகியாக த்ரிஷா, வில்லனாக பிரகாஷ் ராஜ் என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்திருந்தனர்.
இந்தப் படம் குறித்து தரணி ஒரு பேட்டியில் பேசும் போது, விஜய் இப்படத்தில் நிறைய கஷ்டமான காட்சிகளை ஏற்று நடித்தார். மலை மற்றும் சகதிப் பகுதியில் சண்டை போட்டு நடிப்பது எல்லாம் கஷ்டம்.
கபடிக்காக நிஜ வீரர்களுடன் அதிக நாள் பயிற்சி எடுத்தார். கபடிக் காட்சி எடுக்கும் போது அந்த வழியாக சென்ற நடிகர் விக்ரம், மைதான செட்டிற்கு வந்து விஜய் நடிப்பை பார்த்து பாராட்டி விட்டு சென்றார் என்றார்.