சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் Mr.லோக்கல்' மே 17ஆம் திகதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும்,கொஞ்ச நாட்களாக, மே வெளியிடுவோம் என, திகதி சொல்லாமல், திரைப்படக் குழு கொஞ்சம் தட்டிக்கழித்தது என்றே சொல்லலாம்.
இந்த நிலையில், இந்தத் படத்தின் தயாரிப்பு நிறுவனமான, ஸ்டுடியோக்ரீன் நிறுவனம், தனது அதிகாரபூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் 'Mr.லோக்கல்', திரைப்படம் மே 17ஆம் திகதி, திரைக்கு வருவது உறுதி என அறிவித்துள்ளது.
சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா, யோகிபாபு, சதீஷ், ஆர்ஜே பாலாஜி, பிரகாஷ்ராஜ், ரோபோ சங்கர், ஆனந்த்பாபு, சுமன் உட்பட, பலர் நடித்துள்ள இந்த அட்டகாசமான திரைப்படத்திற்கு, ஹிப்ஹாப் தமிழா ஆதி, இசையமைத்துள்ளார்.
Mr.லோக்கல், மிகப்பெரும் திருப்புமுனையான திரைப்படமாக, சிவகார்த்திகேயனுக்கு இருக்கும் என நம்பப்படுகிறது.அத்தோடு, மே 17, திரைப்படம் வரவுள்ளமை உறுதி என்பதால், ரசிகர்கள் படு உற்சாகமாகவும் உள்ளனராம்.