நடிகர், நம்ம சுள்ளான் தனுஷ் நடித்த, ஹாலிவுட் படமான 'The Extraordinary Journey Of The Fakir' திரைப்படம், உலகின் பல நாடுகளில் வெளியாகி, நல்ல விமர்சனங்களை பெற்று வந்ததோடு, நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.
இந்த வேளையில், இந்தப் படம் தமிழில் எப்போதுவரும் என, தனுஷ் ரசிகர்கள் மிகவும் ஆவலாகக் காத்திருந்த நிலையில், அது பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
படத்தின் தமிழ்ப் பெயர் 'பக்கிரி'. ஜூன் 21ஆம் திகதி வெளியாகவுள்ளது.
ஆங்கில நாவல் ஒன்றினை தழுவியே, திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இனி என்ன... தமிழில் திரைப்படத்தைப் பார்க்க தனுஷ் ரசிகர்கள் கடும் குஷியாக காத்திருக்கிறார்களாம்.