மங்கையர்கள் தத்தமது அழகை மேம்படுத்துவதற்கு, எலுமிச்சைப் பழம் பெரிதும் உதவுகின்றது. பெண்களின் சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை எலுமிச்சை தடுப்பதோடு, கருமையாக இருக்கும் சருமத்தை வெள்ளையாக மாற்றவும் பெரிதும் உதவுகின்றது.
எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதன் மூலம் எமது சருமத்தில் உள்ள பருக்களுக்கு காரணமான பக்டீரியாக்கள் அளிக்கப்படுகின்றன.
எலுமிச்சையை சாறு எடுத்து, அத்துடன் சிறிதளவு ஒலிவ் ஒயில், சர்க்கரை மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் மட்டுமின்றி, கை, கால்களிலும் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதன் மூலம் இறந்த செல்களை நீக்க முடியும்.
முகத்தில் அதிகம் எண்ணெய் வழிந்தால், அதனைத் தடுப்பதற்கு எலுமிச்சை உதவி புரியும். அதற்கு தினமும் எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, அதனை பஞ்சில் நனைத்து, முகத்தைத் துடைத்து எடுத்தால், எண்ணெய் சுரப்பு குறையும். முகம் பொலிவடைந்து பளபளப்பாகும்.