இந்திய மக்களவை தேர்தலில் இந்த முறை மொத்தமாக 716 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், 76 பேர் நாடாளுமன்றம் செல்லும் தகுதியை பெற்றுள்ளார்கள். இந்த எண்ணிக்கை, கடந்த தேர்தலைவிட அதிகம் என்று கணிப்பிடப்பட்டுள்ளது.கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 66 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றம் செல்லத் தகுதி பெற்றிருந்தார்கள். இந்தியாவின் 17 வது மக்களவை தேர்தலில் 47 பெண் வேட்பாளர்களை பாரதீய ஜனதா கட்சி களம் இறக்கியது.
இவர்களில் 34 பேர் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்லும் தகுதியை பெற்றுள்ளார்கள். இதேபோன்று காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 54 வேட்பாளர்களில் சோனியா காந்தி, ஜோதிமணி உள்ளிட்டவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்.
இதேபோன்று, இந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும், சுயேர்சையாக போட்டியிட்டவர்களில் தலா ஒருவர் வீதம் தெரிவாகியுள்ளார்கள். கடந்த தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்ற 41 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களில், 28 பேர் மட்டுமே இந்தமுறை தகுதி பெற்றுள்ளார்கள்.