பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்து, மிகப்பெருமளவில் வெற்றிப்படமான திரைப்படம் தான் "96'.
இந்தப் படத்தில் த்ரிஷா, பாடகி ஜானகியின் ரசிகையாகவும், அவருடைய பாடலை அவ்வப்போது பாடும் ஒரு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.
இந்த நிலையில், இவ்வாறு அவ்வப்போது சரி தன்னுடைய பாடல்களை பயன்படுத்தியது மிகப் பெரிய தவறு என்று இளையராஜா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
"80களில் நடக்கும் கதை என்பதால் அந்தக் காலகட்டத்தின் பாடல்களை பயன்படுத்த வேண்டும் என்கிற அவசியம் ஏதும் கிடையாது.எங்கு அவர்களால் முடியவில்லையோ, அந்த இடத்தில், புகழ்பெற்ற பாடலை கொண்டுசென்று திணிக்கிறார்கள். காரணம் என்னவென்றால், அதற்கு ஈடான பாடல்களை அவர்களால் தரமுடியாததுதான் உண்மை .எனது பாடலுக்கு இணையாக ஒரு பாடலை தர முடியாதது அவர்களுடைய பலவீனத்தைக் காண்பிக்கிறது. ஒரு கதையில் 1980-ல் உள்ள பாடல் தேவை என்றால், 80-களில் வெளியான பாடல்களுக்கு நிகரான பாடலை சொந்தமாக இசையமைக்க வேண்டும். அதை விடுத்து, என்னுடைய பாடலை அந்த இடத்தில் பயன்படுத்துவது, ஆண்மையில்லாத்தனம்" என்று இளையராஜா கூறியுள்ளார்