Apple நிறுவனத்தின் 2019ஆம் ஆண்டுக்கான சர்வதேச Developers நிகழ்வில் (WWDC 2019) புதிய செயலிகளை அறிமுகம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
Apple நிறுவனத்தின் 2019ஆம் ஆண்டு சர்வதேச Developers நிகழ்வு California San Jose இல் உள்ள Mercure Convention Centre இல் இடம்பெறவுள்ளது. கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் Keynote உரையும் Apple நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் WWDC செயலிகளில் நேரலையில் ஒளிபரப்பப்படும் .
2019 Developers நிகழ்வு ஜூன் 3 ஆம் திகதி ஆரம்பமாகி ஜூன் 7 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் Apple மென்பொருள் சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளது. Apple நிறுவனம் IOS 13, Mac OS. 10.15 மற்றும் Watch Os. 6 உள்ளிட்ட இயங்குதளங்கள் பற்றி arivikkaபடவுள்ளன.
அதேநேரம் IOS. 13 இயங்குதளம் Yukon என்ற குறியீட்டு பெயரில் உருவாகிவருகின்றது. இதில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் IOS. 13 இல் Dark Mode, UI Tweaks, New Animations மற்றும் அதிகாரப்பூர்வ Swipe typing keyboard வசதி உள்ளிட்டவை வழங்கப்படவுள்ளன.
அத்துடன் Mac சாதனங்களுக்கென Apple நிறுவனம் புதிதாக Apple Music செயலியை உருவாக்கிவருகின்றது. இது ITunes போன்றே செயற்படும். இத்துடன் மேம்பட்ட Mac Pro சார்ந்த அறிவிப்பும் இந்நிகழ்வில் எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், Watch os. 6 தளத்தில் App Store வசதி சேர்க்கப்படவுள்ளது. இத்துடன் Voice Memos செயலி, Animoji, Memoji வசதி, Apple Books செயலி மற்றும் உடல்நலம் சார்ந்த பல புதிய செயலிகள் இந்த நிகழ்வில் அறிமுகம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.