சிரஞ்சீவி தெலுங்கில் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். அரசியலில் ஈடுபட்ட பிறகு சினிமாவில் அவர் நடிக்கவில்லை. புது கட்சி துவங்கினார். பிறகு கட்சியை கலைத்து விட்டு காங்கிரசில் சேர்ந்தார். மத்திய மந்திரியாகவும் பொறுப்பு வகித்தார்.
2007–ல் இருந்து சினிமாவில் நடிக்கவில்லை. எட்டு வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்கிறார். அவர் நடிக்கும் படத்துக்கு ‘ஆட்டோ ஜானி’ என பெயரிடப்பட்டு உள்ளது. இதில் இரண்டு நாயகிகள். அஞ்சலி ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இன்னொரு நாயகியாக நடிக்க நயன்தாராவை அணுகினர். இப்படம் சிரஞ்சிவீக்கு 150–வது படம் என்பதால் நயன்தாரா நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று அவரை ஒப்பந்தம் செய்ய முயற்சித்தனர்.
இந்த படத்தில் நடிப்பதற்கு நயன்தாரா மூன்று கோடி ரூபாய் சம்பளம் கேட்டாராம். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியானார்கள். தெலுங்கில் எந்த நடிகையும் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கவில்லை. அதிகபட்சமாக ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார்கள். நயன்தாரா கேட்டபடி மூன்று கோடி கொடுக்கலாமா அல்லது அவருக்கு பதில் வேறு கதாநாயகியை தேர்வு செய்யலாமா என்று சிரஞ்சீவி ஆலோசிக்கிறார்.
கோடம்பாக்கக் குருவி