"வந்தா ராஜாவா தான் வருவேன்" திரைப்படம் தன்னை திரையுலகில் தன்னை மீண்டும் சின்ன ராஜாவாக்கும் என்ற கனவோடிருந்த நடிகர் சிம்புவுக்கு கைகொடுக்கவில்லை அந்தப் படம்.
நடிகர் சிம்பு தனது முன்னாள் காதலியும் தமிழின் முன்னணி நடிகையுமான ஹன்சிகாவுடன் இணைந்து "மஹா" திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கின்றார். இந்தப் படம் நடிகை ஹன்சிகா நடிப்பில் திரைக்காணும் 50வது படமாக அமையவுள்ளது. வானோடி கதாபாத்திரம் ஏற்று இந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் சிம்புவின் காட்சிகள் அனைத்தும் மிக விரைவில் படமாக்கப்பட்டு நிறைவடையவுள்ள நிலையில், தனது அடுத்த படத்துக்கான தயார்ப்படுத்தல்களில் ஈடுபட ஆரம்பித்துள்ளார் சிம்பு.
பிரபல இயக்குனரும் நடிகருமான வெங்கட் பிரபு "மாநாடு" என்ற திரைப்படத்தை சிம்புவின் நடிப்பில் உருவாக்கவுள்ளதுடன், அதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் இந்த மாதம் நிறைவடைவதற்கு முன்னர் "மாநாடு" படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் என்று படக்குழுவிற்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
"மாநாடு" படத்திற்கான இசைப்பணியை யுவன் சங்கர் ராஜா ஏற்றுள்ள நிலையில், தரமான இசையை வழங்க வேண்டும் என்ற முனைப்பில் யவன் தனது வேளையில் மும்முரமாக இறங்கியிருக்க, நடிகர் சிம்பு மற்றும் ஜோடியாக நடிக்கும் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோருக்கிடையிலான காதல் காட்சிகளை முதலில் படமாக்கும் முடிவில் மலேசியா நாட்டிற்குப் புறப்படத் தயாராகியுள்ளது "மாநாடு" படக்குழு.