அமலாபால் முக்கியமான வேடம் தாங்கி நடித்துள்ள த்ரில் திரைப்படம் ''அதோ அந்த பறவை போல''. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் நிறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள படக்குழு, வெகு விரைவில், இந்த படம் திரைக்கு வரும் என்று, அறிவித்துள்ளது.
அமலாபால், ஆசிஷ் வித்யார்த்தி, சமீர் கொச்சார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ''அதோ அந்த பறவை போல''. இந்த படத்தை வினோத் இயக்கியுள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இந்த படத்திற்கான இசையை வழங்கியுள்ளதுடன், சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படம் அமலாபாலுக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தரும் என, நம்பப்படுகின்றது.