தமிழில் விஷால், ஸ்ரேயா ரெட்டி நடிப்பில் வெளியான படம் திமிரு. இந்த படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் வலது கையாக காலை நொண்டியபடி ஒரு நகைசுவை கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் மலையாள நடிகர் விநாயகன். மலையாளத்தில் தற்போது வில்லனாகவும் குணச்சித்திர நடிகராக இவர் நடித்து வருகிறார்.
விநாயகன் மீது சமீபத்தில் பிஜேபிக்கு எதிரான கருத்தைக் கூறினார் என்பதற்காக, சமூகவலைத்தளங்களில் நிறம் மற்றும் சாதி ரீதியாக தாக்குதலுக்கு ஆளானார். இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மிருதுளா தேவி என்பவர், விநாயகன் மீது பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நடிகர் விநாயகனை தொலைபேசியில் அழைத்தபோது, தன்னிடம் ஆபாசமாக பேசிய அவர், தான் மட்டுமல்லாது, தன்னுடைய தாயும் சேர்ந்து அவரின் விருப்பத்திற்கு, ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என பாலியல் ரீதியாக கோரிக்கை வைத்தார் என குற்றம் சாட்டியுள்ளார் மிருதுளா தேவி.
அதே சமயம் அவர் மீதான சாதி, நிறவெறி தாக்குதல் குறித்து தான் வன்மையாக கண்டிப்பதாகவும் மிருதுளா தேவி கூறியுள்ளார்.