கப்பலில் இருந்து செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய முதல்ச் சாதனையை சீனா படைத்துள்ளது.
இந்த செயற்கைகோள் சீனாவின் ஷான்டோங் மாகாணத்தில் உள்ள மஞ்சள் கடல் பகுதியில் இருந்து ஸ்ரீலாங் மார்ச்-11' என்றழைக்கப்படும் எல்எம்-11 ரொக்கெட் கப்பலில் இருந்து விண்வெளிக்கு நேற்று செலுத்தப்பட்டது.
இந்த ரொக்கெட், 2 தொழில்நுட்ப சோதனை செயற்கைக்கோள்கள், 5 வர்த்தக செயற்கைக்கோள்களை சுமந்து சென்றுள்ளது.
இந்த நிலையில், அது வெற்றிகரமாக செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்தியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.