நெய்மருக்கு சமீபத்தில் காலில் ஏற்பட்ட காயத்தினால் சில போட்டிகளில் விளையாட முடியவில்லை. இதன் பின்னர், காயத்தில் இருந்து குணமடைந்த நெய்மர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் கூறியமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச்சாட்டை மறுத்து வந்த நிலையில், இது சம்மந்தமான வீடியோ ஒன்று வெளியாகி நெய்மருக்கு பெரிய சிக்கலை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், குறித்த பெண்ணும் நெய்மரும் அதே ஹோட்டல் அறையில் சண்டை போடுவது மாதிரியான வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
அந்த வீடியோவில் அடிக்க வந்த பெண்ணிடம் என்னை அடிக்காதே என்று நெய்மர் கூறுகிறார். பின்பு அந்த பெண் நான் அடிக்க விட்டால் நீ என்னை தாக்கி விடுவாய் என்று பதிலளிக்கிறார் . பின்பு, நேற்று நீ இப்படி தானே என்னை அடித்துவிட்டு, தனியே இங்கேயே விட்டு சென்றாய்? என்றும் கூறுகிறார்.
இந்த விடியோவால் நெய்மாருக்கும் மீண்டும் சிக்கல் உருவாகியுள்ளது.