மெக்ஸிகோவின் மாயன் நாகரீகங்களின் மிச்சங்களைக் கண்டுபிடித்த குழுவை வழிநடத்தியவர் ஆராய்ச்சியாளர் ஜில் ஹெய்னர். இவர் அண்டார்ட்டிகாவில் உள்ள பனிப்பாறைகளுக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்துள்ளார்.பனிக் கடலுக்கு அடியிலுள்ள குகைக்குள் துணிச்சலாக முக்குளிக்கச் சென்ற முதல் நபர் மட்டுமல்ல முதல் பெண் ஆராய்ச்சியாளர் இவர்தான்.
கடலுக்குள் மறைந்துபோன பழங்கால நாகரீகங்களைப் பற்றிய ரகசியங்களை வெளிக் கொண்டுவரும் பணியில் ஜில் ஹெய்னர்த் ஈடுபட்டுள்ளார். பனிக் கடலுக்கடியில் நீந்தி ஆராய்ச்சி மேற்கொள்ளும் அனுபவத்தைப் பற்றி கூறும்போது, ‘‘நான் நீந்தி ஆராய்ச்சி செய்த குகைகள் இயற்கை வரலாற்றின் அருங்காட்சியகம் போன்றவை. பழங்கால விலங்குகளின் எலும்புகள், புவிப் பரப்பில் கிடைக்காத பண்டைய நாகரீகத்தின் மிச்சங்கள் இங்குள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.