4,432 Views
காதல் என்றால் இவருக்கு கை வந்த கலை. காதலிலேயே வாழ்ந்து , நடித்து காதல் & கழற்றி விடல் துறையில் சூப்பர் ஸ்டார் பட்டம் பெறும் அளவுக்கு பல நடிகைகளுடன் அப்போதும் இப்போதும் பேசப் படுபவர் நம்ம சிம்பு.
இறுதியாக இவரின் வாலில் தொங்கிகொண்டிருந்த ஹன்சிகா வாலை விட்டு விழுந்தும் சிம்புவை விட்டு விடுவதாக இல்லையாம். அமோகமாக வளர்ந்த காதல் இடையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் உடைந்து போனது தெரிந்த விடயமே.
இது இவ்வாறிருக்க இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பமான படப்பிடிப்பு முடியாத நிலையில் இருந்த வேட்டை மன்னன் திரைப்பட படப்பிடிப்புக்களும் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
வேட்டை மன்னன் என்ற படத்துக்காக சிம்புவுடன் ஹன்சிகா ஜோடி சேர்ந்தது தெரிந்ததே.
இது இவ்வாறு இருக்க அண்மையில் ஹன்சிகா வெளியிட்ட கருத்துக்களில் தன்னுடைய குடும்பம் ஒழுக்கம் நிறைந்த குடும்பம். சிம்பு என்னை புரிந்து கொள்ள வில்லை. ஆனாலும் அவர் (சிம்பு )நல்ல இருக்க வேணும். நானும் அவருடன் நடிக்க வாய்ப்பு வந்தால் கட்டாயம் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார் ஹன்சிஹா.
வாலு திரைப்படத்தின் படப்பிடிப்பின் இறுதிக் கட்டத்தில் இருவரது காதல் உடைந்தாலும் திரைப்படத்தின் முழுமையான காட்சிகளையும் ஹன்சிகா நடித்து கொடுத்திருந்தமையும் குறிப்பிடத் தக்கது