ஸ்மார்ட் phone பயன்பாடு அதிகரித்திருக்கும் நிலையில், சாப்பிடும் போது ஸ்மார்ட் phone ஐ தள்ளி வைக்க வேண்டும் என்று, போப் ஆண்டவர் Francis வலியுறுத்தியுள்ளார்.
வத்திக்கானில் நகரில் திரண்ட கிறிஸ்தவர்கள் மத்தியில் போப் ஆண்டவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது, சாப்பிடும் போது குடும்பத்தினருடன் கலந்துரையாடுங்கள் என்று அறிவுரை கூறிய அவர், இயேசு இப்படிதான் தனது தாய், தந்தையருடன் உரையாடினார் என்று அவர் குறிப்பிட்டார்.