ஜப்பான் தலைநகர் டோக்கியோ வில் இயங்கி வரும் ‘சாஃப்ட்பேங்க் ரோபோட்டிக்ஸ்’ என்ற நிறுவனம் 2014-ம் வருடம் ‘பெப்பர்’ ரோபோவை உருவாக்கியது. இந்த ரோபோ மனிதர்களின் உணர்வுகளைக் கண்டுணர்ந்து கொள்ளக்கூடிய திறன் வாய்ந்த உலகின் முதல் ரோபோ இதுதான். மிகவும் சமூக உணர்வு வாய்ந்த இந்த ரோபோ மனிதர்களுடன் உரையாடவும் செய்கிறது.
பல ஆண்டுகளாக ஆய்வு செய்து மனித உணர்வுகளைப் படிக்கும் விதமாக இதனை செய்திருக்கின்றனர். அறிமுகமான அடுத்த நாள் சாஃப்ட்பேங்க் மொபைல் ஸ்டோரில் பார்வைக்காக பெப்பரை நிறுத்தி வைத்தனர். அடுத்த 60 நொடிகளில் 1000 ரோபோக்கள் விற்றுத் தீர்ந்துவிட்டன. மே 2018-இல் ஐரோப்பாவில் மட்டும் 12 ஆயிரம் பெப்பர் விற்றிருக்கின்றன. இன்று இங்கிலாந்தின் பெரும்பாலான அலுவலகங்களின் வரவேற் பாளர் பெப்பர் தான். முகத்தை வைத்து அலுவலகத் துக்கு வருபவர் களைக் கண்டுபிடிக்கிறது இந்த எந்திரன்.
ஜப்பானில் ஆயிரம் வீடுகளில் பெப்பர் இருக்கிறான். பள்ளி, கல்லூரி உட்பட பல கல்வி நிறுவனங்களில் ஆய்வுப் பணிக்குத் துணையாக இருப்பது பெப்பர்தான்.