புதிய திருப்பமாக அமெரிக்க ராணுவத்தை தீவிரவாத இயக்கமாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. ஒரு நாட்டின் ராணுவத்தை, இன்னொரு நாடு தீவிரவாத அமைப்பு என்று அறிவிப்பது இது தான் முதல்முறை. உலக அரசியலில் மிகப்பெரிய திருப்பமாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.
இதேவேளை இதற்கான தீர்மானம் ஈரான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதில் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனை தீவிரவாத இயக்க தலைமையகமாக அறிவித்தது ஈரான் அறிவித்துள்ள அதேவேளை . அமெரிக்காவின் முப்படைகளும் தீவிரவாத இயக்கம்தான் என்று ஈரான் கூறியுள்ளது.
இந்த முப்படைகளும் தீவிரவாத இயக்கம் என்று அறிவித்து இருப்பதால், அதன் தலைவர் அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரவாதி என்று பொருள்படுவார் என அறிவித்துள்ளது ஈரான் . இந்த அறிவிப்பு அமெரிக்காவை உணர்வு ரீதியாக சீண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பதிலடியாக ஈரானை அமெரிக்கா விரைவில் தாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.