நான் செய்த தவறை யாரும் செய்ய வேண்டாம் -புலம்பும் பில்கேட்ஸ்.
எவ்வளவு பணம் இருந்தும் தான் செய்த தவறை நினைத்து தினம் தோறும் மனவேதனையோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார் , கோடீஸ்வரரும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் உரிமையாளருமான
பில்கேட்ஸ்.
இது குறித்து இளைய சமுதாயத்தினருக்கு தனது வலைப்பதிவில்
அவர் கூறியிருப்பதாவது வெற்றியை அடைய மிக இலகுவான வழி பட்டப்படிப்புதான். எனவே மாணவர்கள் பட்டபடிப்பை முடியுங்கள் எந்த காரணம் கொண்டும் இடையில் பட்டப்படிப்பை விட்டுவிடாதீர்கள் , நான் செய்த தவறை எந்த சந்தர்ப்பத்திலும் செய்து விடாதீர்கள் , நான் எனது பட்டப்படிப்பை இடையில் நிறுத்தியதை நினைத்து தினம் தினம் வேதனை அடைகின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு கல்லூரியில் படித்து பட்டம் பெறுபவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதோடு கை நிறைய சம்பளம் ,மற்றோர் இடத்தில் மதிப்பு ,நல்ல தரமான வாழ்க்கை வாழக்கூடிய சந்தர்ப்பம் என்பவற்றை பெற்றுக்கொள்ளலாம், அத்தோடு நாட்டின் பொருளாதாரமும் தரமுயரும் என்றும் தெரிவித்துள்ளார்.