தங்க காசு...லட்சக்கணக்கான பணம்! எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க தெரியுமா..?
பொதுமக்களிடம் முதலீடு பெற்று ரூ.46 கோடி பண மோசடியில் ஈடுபட்டதாக நடன நடிகர் ஒருவர் மற்றும் பெண் தொழிலதிபருடன் அண்மையில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட வரலாறு உங்களுக்கும் தெரிந்ததே!
எப்படியான சமூகத்தில் நாங்கள் வாழ்கிறோம் என்று தெரியாமலே இப்படியெல்லாம் ஆசைகாட்டி ஏமாற்றும் வரலாறுகள் பலது நடந்திருக்கிறது .
அப்படி என்ன இவர் ஏமாற்றினார் என்றா கேட்கிறீர்கள்..?
சென்னை கோயம்பேடு பிருந்தாவன் நகரில் கார்களை வாடகைக்கு விடும் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார் நர்மதா(34) என்ற பெண் தொழில் அதிபர்.
இந்நிலையில் இவரது நிறுவனம் மீது சென்னை சூளைமேடு வீரபாண்டியன் நகரைச் சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் என்பவரும், மேலும் 5 பேரும் புகார்மனுக்கள் கொடுத்தனர்.
அந்த மனுக்களில், தொழில் அதிபர் நர்மதா நடத்தி வரும் நிறுவனத்தில் கார்களை வாடகைக்கு எடுக்கும் வாடிக்கையாளர்களில் நாங்களும் இருந்தோம்.
அவர் எங்களுக்கு கைப்பேசியில் வாடிக்கையாளர்களுக்கு இனிய நற்செய்தி என்று வாடிக்கையாளர் முதலீடு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தினார்.
யாருக்கு ஆசை வராது...... :P
அதில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், 3 ஆண்டுகளில் ரூ.1.80 லட்சமாக திருப்பித்தரப்படும் என்றும், அத்துடன் தங்க காசு பரிசாக கிடைக்கும் என்றும், ஒரு ஆண்டு காரில் இலவச பயணமும் செல்லலாம் என்றும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதையடுத்து அவரை நம்பி, நாங்கள் ரூ.64 லட்சம் வரை முதலீடு செய்தோம். அவர் சொன்னபடி தன் ஏமாற்று நாடகத்தை கொஞ்சம் மெருகேற்ற சிலருக்கு தங்க காசு பரிசாக கொடுத்ததால் மேலும் நூற்றுக்கணக்கான பேர் முதலீடு செய்தனர்.
ஒரு சிலருக்கு முதலீட்டு பணத்துடன் கவர்ச்சி அறிவிப்பில் சொன்னபடி பணத்தை திருப்பி கொடுத்ததோடு பலருக்கு வங்கி காசோலை கொடுத்தார்.
பணம் பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள் ஆனால் வங்கி காசோலைகள் நர்மதாவின் வங்கி கணக்கில் பணம் இல்லாததால் திரும்பின.
எனவே நர்மதா மீதும், அவரிடம் மேலாளராக வேலை பார்க்கும் பரத்குமார்(24) மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் பாதிக்கபட்டவர்கள் குறிப்பிட்டனர்.
இதையடுத்து பொலிசார் நடத்திய விசாரணையில், நர்மதா மீதும், அவரது நிறுவன மேலாளர் பரத்குமார் மீதும் மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இப்படியெல்லாம் மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்ட இருவரும் சிறையில் வாடுகிறார்களாம்.
ஏமாறுபவர்கள் இருந்தால் ஏமாற்றுபவனுக்கு கொண்டாட்டம் என்று சும்மாவா சொன்னார்கள்.
எதுக்கும் அவதானமுங்கோ :P