மலையாளத்தில் வெளிவந்து பாரிய வெற்றிபெற்ற "த்ரிஷ்யம்" திரைப்படம் தற்போது உலக நாயகன் கமலில் நடிப்பில் ரீமேக் ஆகின்றது.
இப்படத்தில் கமல், கௌதமி,நிவேதா, தாமஸ் ஆகியோர் நடிக்க பாபநாசம் என்ற பெயரில் ரீமேக்காக உருவாகின்றது.
இத்திரைப்படத்திற்கு பாரிய எதிர்பார்ப்புகள் இருக்கும் நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் புதிதாக இணைந்துள்ளார். மலையாள முன்னணி நடிகர் மேகன்லாலின் மகன் பிரணவ் . இத்திரைப்படத்தின் மூலம் இவர் தமிழுக்கு அறிமுகம் ஆகின்றார் என்பது குறிப்பிடதக்கது.
பாபநாசம் திரைப்படத்தில் இவரின் பாத்திரம் முக்கியம் வாய்ந்ததாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கிராமத்து பின்னணியில் நடக்கும் சம்பவங்களை கதைக்களமாக கொண்டு நகரும் பாபநாசம் திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கின்றார் மலையாளத்தில் இயக்கிய ஜீத்து ஜோசப் தமிழிலும் இயக்குகிறார். மேலும் இந்த திரைப்படத்தில் கமலின் மூத்த மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார். இவர் 'போராளி' 'நவீன சரஸ்வதி சபதம்' 'ஜில்லா' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
கமல்-கௌதமி தம்பதியரின் இளைய மகளாக எஸ்தர் என்னும் குழந்தை நட்சத்திரம் நடிக்க உள்ளார். காவல்துறையாக கலாபவன் மணி நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. படத்தின் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடை பெற்று வருகிறது. என்பது குறிப்பிடதக்கது