மலையாளத்தில் வெற்றி பெற்ற திரிஷ்யம் என்னும் படம் தமிழில் பாபநாசம் என்னும் பெயரில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் உலக நாயகன் கமல்ஹாசனும் கவுதமியும் நடித்து வருகிறார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது. இதில் கமல் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சாப்பிட்ட உணவு அவருக்கு ஒத்துக்காததால் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. அதனால் சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது பற்றி நாம் ஏற்கெனவே கும்மாளம் நிகழ்ச்சியில் சொல்லியிருந்தோம்.
சிகிச்சைக்கு பின் அவரது உடல் நிலை சரியானது. நலமான உடலுடன் அவர் நேற்று மாலை வீடு திரும்பினார்.