Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
20
அசைக்க முடியாத சூரியன் - என்றும் அன்புத் தமிழரின் செல்லப்பிள்ளை

Sooriyan 17 years - அசைக்க முடியாத சூரியன் - என்றும் அன்புத் தமிழரின் செல்லப்பிள்ளைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,255 Views
தமிழோடு இசை குழைத்து காற்றுக்கும் வாசம் சேர்த்த தமிழனின் அடையாளம் , இந்த ஒற்றைச்  சொல் கேட்டால் அற்றை திங்களும் இவன் மேல் காதல் கொள்ளும். கற்றை குழல் கொண்ட காரிகையர் முதல் எம் தமிழ் மேல் காதல் கொண்ட காளையர் வரை இவன் பெயர் கேட்டால் இன்புற்று புன்னகைப்பர் .
தனித்துவம் அதுவே இவனின் மகத்துவம்.
இவனின் தமிழோடு இசை கேட்டால் கிடைக்கும் புது சுகம்.
செம்மொழியின் காவலன் 
செவி வழி இன்பம் சேர்க்கும் சிநேகமான தோழன் 
காற்றலையின் ஒரே முகவரி ....
என பலவாறு விழித்திடும் ஒற்றை மந்திரம் 
ஆம் !!!
      "சூரியன்" 

நிமிர்ந்த நடையோடு நிகரில்லா சாதனைகள் கொண்ட 16 வருட பயணம் .இன்னும் சில நாட்களில் இவனுக்கு 17 வயது. இந்த teenage பருவ trendsetter இன் அபரிமித  வளர்ச்சியினை காண்கையில் எம் மனமெங்கும்  எல்லையில்லா ஆனந்தம் கரை புரள்கிறது .

" 1998 " தமிழர் வாழ்வில் மறக்க முடியாத வருடம் .. 
தமிழர் குரலை உலகிற்கு எடுத்து செல்லும் ஒரு வரலாற்று பயணத்தின் ஆரம்பம் இந்த ஆண்டிலேயே நிகழ்ந்தது ..
 
சொற்ப பாடல்களும் தொழில் சார் அறிவிப்பு பாணியும் மட்டுப்படுத்தப்பட நேர அளவும் கொண்ட வானொலி கலாசாரத்தோடு எம்மவர் வாழ்ந்த வேளையில் வந்துதித்தான் வானலை சூரியன்..
இறுக்கம் இல்லாத இயல்பான பேச்சு, இனிமை சேர்க்கும் இடைவிடாத பாடல்கள், இவற்றால் இவன் புகழ் குறுகிய காலத்தில் பட்டி தொட்டி எங்கும் பரவியது . நேயர்களிற்கும் அறிவிப்பாளர்களுக்கும் இடையேயான இடைவெளி வெகுவாக குறைந்தது. அறிவிப்பாளர்களை தம் வீட்டு பிள்ளையென எண்ணும் நிலை தோன்றியது. இதுவே இவனின் வெற்றிக்கு அச்சாரமாயும் அமைந்தது .
 
 அது மட்டுமல்லாது நம்பகத் தன்மை வாய்ந்த நடுவு  நிலைமையான எமது செய்திகள். யுத்த மேகம் சூழ்ந்திருந்த காலப்பகுதியில் பக்கசார்பு இல்லாது உள்ளதை உள்ளபடி சொல்லும் இவனது துணிவு இன்று வரை சூரியனின் பெயரை நேயர் தம் நெஞ்சங்களிற்கு எடுத்து சென்றுள்ளது.  அது மட்டுமல்லாது யுத்த மேகம் சூழ்ந்திருந்த காலப்பகுதியில் களத்தில் நின்று நெஞ்சோடு உறம் கொண்டு உடனுக்குடன் செய்திகளை தந்தவனும் இவன் தான் .

நிற்க,
 எமது விரிவாக்கல் குழுவினரின் வியர்வை சிந்தும் உழைப்பும் வியந்து போற்றுதற்குரியது ..தாம் செய்யும் ஒவ்வோர் விரிவாக்கல் நடவடிக்கைகளினதும் 100 வீத வெற்றிக்காய் இரவு பகல் பாராது உழைக்கும் இவர் தம் சேவையை என்னவென்று சொல்வது ...இசை நிகழ்ச்சிகளாய் இருக்கட்டும் பிற நிகழ்ச்சிகளாய் இருக்கட்டும் எல்லாவற்றிற்கும் அதிக அளவு நேயர்களை ஈர்க்கும் வித்தை தெரிந்தவர்கள் எம் விரிவாக்கல் குழுவினர் ..

இந்த 17 ஆண்டுகளில் சூரியன் செய்திட்ட சாதனைகள் பல கோடி .ஆனாலும் இந்த சாதனைகள் மத்தியில் பல வேதனைகளையும் இந்த வானலை வேந்தன் சந்தித்திருக்கின்றான் .அரசியல் அழுத்தங்களினால் ஒலிவாங்கிகள் முடக்கப்பட்ட சந்தர்ப்பங்களாக இருக்கட்டும் அறிவிப்பு துறையில் எம் ஒலிவாங்கி முன்னிருந்து ஜாம்பவான்களாகி பின் அகரம் சொல்லிக்கொடுத்த முதல்வனை பிரிந்து எம்மீது சேறு பூசிய சந்தர்ப்பங்களாக இருக்கட்டும் எல்லா சோதனைகளையும் வேதனைகளையும் சாதனைகளாக்கி சரித்திரம் படைத்தவன் நம் முதல்வன் சூரியன் .பகலவனைக்கண்ட பனி போல் படு துயர் நம் சூரியன் முன்னே தெறித்தோடிவிடும்  இது சகலரும் அறிந்த நிதர்சனம்..

இந்த 17வது பிறந்தநாளுக்காக சூரியன் நேயர்களுக்கு வழங்கவுள்ள விலையுயர்ந்த அன்புப் பரிசுகள் 


முதன்மை வானொலி எனும் மகுடத்திற்காய் பல வானொலிகள் முட்டி மோதிக்கொண்டிருக்க நம் முதல்வனோ நிமிர்ந்த நடையோடு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனாய் ஒவ்வோர் ஆண்டும் முதன்மை வானொலியாக திகழ்ந்துகொண்டிருக்கின்றான் ..இருப்பினும் இன்னும் பல வானொலிகள் தமக்கு தாமே முதன்மை பட்டதை சூட்டி தம்பட்டம் அடித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கையில் நகைப்பாக உள்ளது Facebook  பக்கங்களில்  இன்னமும் முப்பதாயிரம் நாற்பதாயிரம் விருப்புகளைக் கூட எட்டிப்பிடிகாதவர்கள் ஆறு லட்சத்திற்கும் அண்மித்த Facebook விருப்புகளை கொண்ட எம் முதல்வன் முன்னின்று  பொய் உரைக்கின்றார்கள்.
https://www.facebook.com/Sooriyan.FM.SriLanka

சூரியன் நிகழ்ச்சிகளின் உத்தியோகபூர்வ ரசிகர் பக்கங்கள்
 
அது மாத்திரமல்லாது வானொலி நிறுவனங்களின் தரப்படுத்தல்  வரிசையினை கணிப்பீடு செய்யும் நிறுவனங்கள் தொடர்ச்சியாக சூரியனே அதிக நேயர்களைக் கொண்ட வானொலி என சொல்கையில் இந்த பத்தாம் பசலிகளிற்கு மண்டையில் உறைப்பதில்லை போலும். 
ஆரம்பித்த நாள் தொட்டு கொழும்பு பாரிய பகுதி, மேல் மாகாணம், அகில இலங்கை என சகலவிதமான தரப்படுத்தல்களிலும் சூரியனின் முன்னிலையையும் சூரியனின் அசைக்கமுடியாத ஆதிக்கத்தையும் மற்ற வானொலிகள் நெருங்கியது இல்லை அல்லது வெகு அரிது.



அத்தோடு எமது சேவை அதிகளவான நேயர்களைச் சென்று சேர்வதனால் தான் பல நிறுவனங்கள் எம் வானொலி மீது நம்பிக்கை கொண்டு தமது விளம்பரங்களை ஒலிபரப்புகிறார்கள்..இது போன்ற காரணிகள் எமது வானொலியே உண்மையில் முதல்வன் என்பதை பறைசாற்றுவதற்கு போதுமானவையாக அமைகின்றன  ..

மேலும் எம் விரிவாக்கல் நுட்பங்கள் மற்றும் வழிமுறைகளை சிலகாலம் விமர்சிக்கும் வானொலிகள் பின் அதே பாணியில் தம் விரிவாக்கல் நடவடிக்கைகளை மேற்கொள்வது இப்போதெல்லாம் வாடிக்கையாகி விட நேயர்களிற்கோ அவர்களின் கோமாளித்தனமான செயற்பாடுகள் வேடிக்கையாக இருக்கின்றது ..

அண்மைக்காலமாக அதிகளாவான தினசரி நோக்குனர்களைக் கொண்ட இணையதளமாக எம் இணயதளம் மாறியமை சூரியனின்  இன்னுமோர் சாதனை ...அது மாத்திரமல்லாது ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தனித்தனியே Facebook  தளங்களைக் கொண்டுள்ளதோடு அவ் ஒவ்வொரு பக்கங்களும் அதிகளவான நேயர்களினால் விரும்பப்படும் பக்கங்களாக இருப்பதும் விந்தை .
 
அத்துடன் இணைய, சமூக வலைத்தள யுகமான இந்தக் காலகட்டத்திலும் இளைஞர் விரும்பும் நவீன யுக்திகள், நவீன தொழினுட்பங்களை உடனடியாகவே நெறிப்படுத்தி அதன் வழி புதுமைகளை இணையவழியிலும் உட்புகுத்தி இணையப்பரப்பிலும் சூரியன் தனக்கென தனியிடத்தைப் பிடித்து உலகம் முழுதும் வாழும் தமிழ்பேசும் மக்களை இணைக்கும் பாலமாக செயற்பட்டு வருகிறான்.
 
இந்த வித்தகன் ,வேந்தன், வானலையின் மைந்தனிற்கு இன்னும் சில நாட்களில் அகவை 17..அகம் எங்கும் சுகம் நிரப்பி சுட்டெரிக்கும் சூரியனாய் சுந்தரத் தமிழின் காவலனாய் மென்மேலும் திகழ  அன்பு நேயர்கள் என்றும் போல எம் வழி நிற்பார்கள் என நம்பிக்கையுடன் & நன்றியுடன் தொடர்நடை போடுகிறோம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top