50 வருடங்களுக்கு முன் தோன்றிய பார்பி பொம்மைகளைப்பற்றி யாரும் அறிந்திராது இருக்க வாய்ப்பில்லை. குழந்தைகள் முதல், டீன் ஏஜ் பெண் பிள்ளைகள், உட்பட அனைவரையும் கவர்ந்த இந்த பார்பி பொம்மைகளின் அழகு இன்னமும் குறையவில்லை அதே போல, மக்களுக்கும் இந்த பொம்மை மேலுள்ள ஆசையும் இன்னமும் குறையவில்லை.
அனைவராலும் பேசப்படுகின்ற இந்த பார்பி பொம்மையை போலவே காட்சியளிக்கும் ஒரு பெண்மணி இருக்கிறார். இவரின் பெயர் வெலேரியா... இவர் சோவியத் யூனியனிற்குச் சொந்தமான திர்ரஸ்போல் என்னும் பின்தங்கிய கிராமத்தில் 1985ம் ஆண்டு பிறந்தவர். 29 வயதான வெலேரியா திருமணமானவர், அதிலும் குழந்தைகள் பெற்றுக்கொள்ள மாட்டேன் என்ற ஒப்பந்தத்தின் பேரில் திருமணம் செய்துகொண்டவர்.

வெலேரியாவிற்கு சிறு வயதிலிருந்தே தான் நேசிக்கும் பார்பி பொம்மையை போன்று மாறவேண்டும் என்று ஓர் ஆசை, அதற்காக தன்னை ஆயத்தப்படுத்திகொண்டிருந்தவர், 2007 ம் ஆண்டு மிஸ் டயமண்ட் ஒப் தி வேர்ல்ட் பட்டத்தை பெற்றுக்கொண்டார் இதன் பின் இவரின் ஆர்வம் மேலும் அதிகரித்தது. சத்திரசிகிச்சைகளை செய்துகொண்டு, தன் எடையை குறைத்து, அதிகப்படியான மேக்கப்களைப் போட்டு தன்னை ஒரு பார்பி பொம்மையை போலவே தயார்படுத்திகொண்டு இப்போது அனைவரும், இது பெண்ணா? பொம்மையா என வியக்கும் அளவிற்கு தன்னை மாற்றிக்கொண்டுள்ளார்.

50 வருடங்கள் ஆனபோதும் பார்பி பொம்மைகளின் அழகு குறையவில்லை, அதே போல எத்தனை வயது ஆனாலும் வெலேரியாவும் அழகான தோற்றத்துடன் காட்சியளிப்பாரா?
ம்ம்ம் பொறுத்திருந்து பார்ப்போம் அனைத்தும் காலத்தின் கையில் தான் உள்ளது.