கொழும்பு பெஸ்டியன் மாவத்தை பஸ் தரிப்பிடத்தில் பயணப்பொதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்ட சடலம் அடையாளங்காணப்பட்டுள்ளது.
அவர் யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 34 வயதானவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் அவர் 7 நாட்களுக்கு முன் கொழும்புக்கு வந்துள்ளதாகவும் தெரியவருகின்றது. மேலும் அவரது கணவன் வெளிநாட்டில் இருப்பதாகவும் வேறொரு ஆணுடனேயே கொழும்புக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.