Sangarabharanam in Digital - புதிய தொழில்நுட்பத்தில் மெருகேறும் "சங்கராபரணம்" திரைப்படம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
627 Views
பரத நாட்டியத்தையும், இசையினையும் ஒருங்கிணைத்து கருக்கொண்ட திரைப்படமே "சங்கராபரணம்" 1979 ஆம் ஆண்டு வெளிவந்து நூற்றாண்டு விழா கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்திய சினிமாவின் புகழை உலக அரங்கில் பறைசாற்றிய படங்களில் முக்கியமான படம் “சங்கராபரணம்”.
தெலுங்கு மொழியில் வெளியாகி ஆந்திராவில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் 100 நாட்கள் ஓடி, வசூல் சாதனை புரிந்து பல தேசிய விருதுகளை வாங்கி குவித்தது.
கே.விஸ்வநாத் இயக்க, பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்திருந்தார் 1979 ஆம் ஆண்டு வெளிவந்து பலரது வரவேற்பை பெற்ற சங்கராபரணம் திரைப்படம் தற்போது "டிஜிட்டல்" தொழில்நுட்பத்தில் புதிய மெருகோடு திரைக்கு வருகின்றது. இந்த திரைப்படம்
35 வருடங்களுக்கு பிறகு தமிழில் மொழிமாற்றத்தோடு திரைக்கு வருகின்றது சினிமாஸ்கோப் DTS மற்றும் டிஜிட்டல் என இன்றைய நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு 'சங்கராபரணம்' உருவாகிக் கொண்டிருக்கிறது.
சோமையா ஜுலு, மஞ்சுபார்கவி, ராஜலட்சுமி,துளசி, சந்திரமோகன், அல்லு ராமலிங்கய்யா ஆகியோர் நடித்த 'சங்கராபாரணம்' படத்திற்கு கே.வி.மகாதேவன் இசையமைத்து இருந்தார். தமிழுக்கான புது வடிவத்திற்கு ரவிராகவ் இசையமைத்து மெருகேற்றியுள்ளார்.
வருகின்ற ஒக்டோபர் 2ம் தேதி இப்படம் வெளிவர இருக்கிறது. இந்நிலையில் நவீன முறையில் மாற்றப்பட்ட இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் செப். 25ம் திகதி நடைபெற்றது விழாவில் சங்கராபரணம் படத்தின் தயாரிப்பாளர் எடிடா நாகேஸ்வரராவ், இயக்குநர் கே.விஸ்வநாத், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோர் பங்கேற்று இசை தட்டை வெளியிட்டு வைத்தனர்.
இசைவெளியிட்டு விழாவில் பேசிய, எஸ்.பி.பாலசுப்ரமணியம் "சங்கராபரணம் திரைப்படத்துக்காக பாடல்களை பாடுகின்ற போது அப்போது எனக்கு வயது 33 இப்போது வயது 68. கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு பிறகு அதேபாடலை நான் இப்போது தமிழில் பாடியிருக்கிறேன். 68 வயதாகியும் எனது குரல் அப்படியே இருக்கிறது என்றால் இதை கடவுள் கொடுத்த வரமாக நினைக்கிறேன்."