846 Views
சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் காரணமாக இப்போது அரசியல் தலைவர்களும் தங்கள் அரசியல் உள்ளிட்ட நடவடிக்கைகளை இதன்மூலம் நன்றாக அரங்கேற்ற கற்றுகொண்டிருக்கிறார்கள்.
படித்தவர் முதல் பாமரர் வரை இப்போது எல்லோரும் வேலைபார்க்கும் இடமாக இந்த Facebook மாறியிருக்கிறது.
இந்நிலையில் செக்குடியரசைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தை மேற்கோள்காட்டி தி நியூயார்க் டைம்ஸ் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.
அதன்படி Facebook இல் அதிக அளவில் வெளிநாட்டு ரசிகர்கள் உள்ள தலைவர்களில் பட்டியலில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் Facebook ரசிகர்களில் 1 கோடியே 50 லட்சம் பேர் அமரிக்கர்கள், மீதமான 3 கோடியே 70 லட்சம் பேர் அமெரிக்கா அல்லாத நாட்டவர்கள். இதனடிப்படையில் அதிக வெளிநாட்டு ரசிகர்கள் வைத்திருக்கும் தலைவர்கள் பட்டியலில் ஒபாமாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
அத்தோடு இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் facebook,Twitter இல் கணக்கு வைத்துள்ளார். இப்படியிருக்க அமெரிக்காவில் இருக்கும் பெரும்பாலான அமெரிக்க தலைவர்களைவிட மோடிக்கு அதிக அமெரிக்கர்கள் Facebook இல் ரசிகர்களாக உள்ளார்களாம்.
இந்திய நாடாளுமன்ற தேர்தல் பிரசாரங்களில் மோடி இந்த சமூக வலைத்தளங்களை சாதகமாய் பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.