ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் பதவி ஏற்பு நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தின், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் இடம்பெற்றது.
இதன்படி, பெருந்தெருக்கள் ராஜாங்க அமைச்சராக டிலான் பெரேரா பதவி ஏற்றுள்ளார்.
தேசிய ஒற்றுமைக்கான ராஜாங்க அமைச்சராக ஏ.எச்.எம்.பௌசி பதவி ஏற்றுக் கொண்டார்.
காணி ராஜாங்க அமைச்சராக ரீ.பி.ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்ட, ஒழுங்கு, சிறைச்சாலைகள் புனர்வாழ்வளிப்பு ராஜாங்க அமைச்சராக பிரியங்கர ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவுகள் ராஜாங்க அமைச்சராக ரவீந்திர சமரவீர பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.
லகஸ்மன் யாப்பா அபேவர்தன, நிதி ராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார்.
கல்வி ராஜாங்க அமைச்சராக மீண்டும் வீ.ராதாகிருஷ்ணன் பதவி ஏற்றுக் கொண்டார்.
பாலித்த ரங்கே பண்டார, திறனபிவிருத்தி மற்றும் தொழில்சார் பயிற்சி ராஜங்க அமைச்சரா பதவி ஏற்றார்.
மீன்பிடி மற்றும் நீரியல்வளத்துறை அபிவிருத்தி ராஜங்க அமைச்சராக திலும் வெதாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளதார நடவடிக்கைகள் தொடர்பான ராஜாங்க அமைச்சராக, நிரோசன் பெரேரா பதவி ஏற்றுக் கொண்டார்.
பாதுகாப்பு ராஜாங்க அமைச்சராக ருவான் விஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா புனர்வாழ்வளிப்பு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டார்.
பல்கலைக்கழக கல்வி ராஜாங்க அமைச்சராக மொஹான் லால் க்ரேரு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏ.டி.சம்பிக்கா பிரேமதாஸ, கைத்தொழில் மற்றும் வர்த்தக விவகார ராஜாங்க அமைச்சராக பதவி ஏற்றார்.
விஜயகலா மகேஸ்வரன் சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.
சுஜீவ சேனசிங்க சர்வதேச வர்த்தக ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வசந்த சேனாநாயக்க நீர்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ ராஜாங்க அமைச்சராக பதவி ஏற்றார்.
வசந்த அலுவிகார விவசாய ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுதர்சனி பெர்ணான்டோபிள்ளை நகர திட்டம் மற்றும் நீர்பாசன ராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.
இதேவேளை, 21 பிரதி அமைச்சர்களும் இன்று பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டனர்.
இதன்படி,
வனவிலங்கு துறை பிரதி அமைச்சர் சுமேதா ஜீ ஜெயசேன
அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே
கிராமிய பொருளதார பிரதி அமைச்சர் அமீர் அலி
மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர் லசந்த அலகியவன்ன
வீடமைப்பு மற்றும் நிர்மான பிரதி அமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்க
சுகாதார, போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ பிரதி அமைச்சர் மொஹமட் பைசால் காசிம்
அஞ்சல், அஞ்சல் சேவை மற்றும் முஸ்லிம் சமயவிவகார பிரதி அமைச்சர் துலிப் விஜயசேகர
பெருந்தோட்ட கைத்தொழில் பிரதி அமைச்சர் லக்ஸ்மன் வசந்த பெரேரா
துறைமுக மற்றும் கப்பல்துறை பிரதி அமைச்சர் நிசாந்த முத்து-எட்டிகம
அனர்த்த முகாமைத்துவ பிரதி அமைச்சர் துனேஸ் கன்கந்த
கனிய எண்ணெய் மற்றும் பெற்றோலிய வாயு தொடர்பான பிரதி அமைச்சர் அனோமா கமகே
வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா
மின்சாரம் மற்றும் மீளமைக்கக்கூடிய சக்திவள பிரதி அமைச்சர் அஜிப் பீ பெரேரா
அரச கைத்தொழில் அபிவிருத்தி பிரதி அமைச்சர் இரான் விக்ரமரட்ன
சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க
போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக்க அபேசிங்க
உள்நாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சர் அருந்திக்க பெர்ணாண்டோ
தொலைதொடர்புகள் மற்றும் எண்மான தொழில்நுட்ப வசதிகள் பிரதி அமைச்சர் டில்ஹான் தாராத்
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் மொஹமட் ஹாரிஸ்
மாகாண மற்றும் உள்ளுராட்சி விவகார பிரதி அமைச்சர் கருணாரட்ன பரணவித்தானகே
சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்த்தவ மத விவகார பிரதி அமைச்சர் நிமல் லன்சா ஆகியோர் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிராணம் செய்துக் கொண்டனர்.
அதேநேரம் , வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சர் சிறிபால கம்லத், மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பிரதி அமைச்சர் ப்ரதீப் ஜெயரத்ன மற்றும் பிரதி நீதி அமைச்சர் சாரதி துஸ்மந்த ஆகியோர் பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள போதும், பதவி ஏற்பு நிகழ்விற்கு சமுகமளிக்கவில்லை.