8,407 Views
படத்தில் விஜய் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்கிறார் என்றும் அதற்கு ஆதாரமாக ஒரு புகைப்படமும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அந்தப்படத்தின் கதை, மணிரத்னம் தயாரிப்பில் கே.சுபாஷ் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான சத்ரியன் படத்தின் கதையை ஒத்திருப்பதாகச் சொல்லப்பட்டது.
இப்போது அந்தப்படக்குழுவினரும் இது சத்ரியன் படத்தையொட்டி உருவான கதைதான் என்று சொல்லியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அந்தப்படத்தில் விஜயகாந்துக்கு இணையாக வில்லனாக நடித்த திலகனின் வேடமும் பேசப்பட்டது. இந்தப்படத்தில் அந்த வேடத்தை இயக்குநர் மகேந்திரன் செய்வதாகச் சொல்லப்படுகிறது.
அந்தப்படத்தில் பானுப்ரியா, ரேவதி ஆகிய இரண்டு நாயகிகள் இருந்தார்கள். இந்தப்படத்தில் ஸ்ருதி மற்றும் எமிஜாக்சன் ஆகிய இருவர் இருக்கிறார்கள். எனவே இது சத்ரியன் படத்தைத் தழுவி எடுக்கப்படுவது உறுதிதான் என்று திரையுலகில் பேச்சு இருக்கிறது.